வியாழன், 11 நவம்பர், 2010

தீவுப்பகுதி தேர்தல் முடிவுகள்   வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள்

தமிழகத் தேர்தல்கள்

திருமாவளவன்

தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது. இவரின் அரசியல், சமூக நடவடிக்கைகள் வன்முறைசார்ந்து வெளிப்படுவதாக விமரிசனங்கள் உண்டு.அரசியல் கொள்கை

தலித் மக்களின் உரிமைகளுக்காக் போரட்டம் நடத்தல்,தனித்தமிழ் வளர்சிக்கு உதவுதல்,சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடல்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்,தனித்மிழீழத்திற்காக ஆதரவளித்தல்,இந்துத்துவ கொள்கையினை எதிர்தல் போன்றன அவரது முக்கிய கொள்கையாகும்.
[தொகு] படைப்புகள்

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக திருமாவளவன் பல கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

* அத்துமீறு
* தமிழர்கள் இந்துக்களா?
* ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
* இந்துத்துவத்தினை வேரறுப்போம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
[தொகு] திரைப்படங்கள்

திருமாவளவன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும்.இதில் இவர் கிளர்ச்சி தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார். [1] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாதிரியாக அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.இதுதவிர கலகம்,என்னைப்பார் யோகம் வரும் ஆகிய திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
[தொகு] இவற்றையும் பார்க்க்

* திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்

[தொகு] வெளி இணைப்புக்கள்

* விடுதலை சிறுத்தைகள் கட்சி
* திருமாவளவன் உரைகள்,படங்கள்,காணொளிகள்
* தமிழ்மன் - ஆசிரியர் தொல்.திருமாவளவன்

வைகோ

வை. கோபால்சாமி

அரசியல் கட்சி ம.தி.மு.க
கட்சி பொறுப்பு பொதுச்செயலாளர்
பிறப்பு மே 22 1944 (அகவை 66)
கலிங்கப்பட்டி , திருநெல்வேலி மாவட்டம்[1]
கல்வி கலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை
வாழ்க்கைத்
துணை ரேணுகாதேவி
பிள்ளைகள் 1 மகன், 2 மகள்கள்
இருப்பிடம் சென்னை
இணையத்தளம் www.vaiko-mdmk.comவைகோ (பி. மே 22, 1944; இயற்பெயர்: வை. கோபால்சாமி) தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார். இவர் பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் அதிலிருந்து பிரிந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தொடங்கினார். மூன்று முறைநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.

அண்ணாதுரை

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
வரலாறு

பச்சையப்பா முதலியார் 1754ஆம் ஆண்டு வறிய பெற்றோருக்குப் பிறந்தார். வறிய நிலையிலேயே வளர்ந்த அவர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோதுதான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:

“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.

அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது.மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.[1]
[தொகு] கல்லூரி முதல்வர்கள்

* பேரா.ஜான் ஆடம் 1884-1894
* பேரா.எரிக் ட்ரூ 1906-1912
* பேரா.ஜே.சி.ரோல்லோ எசோ 1912-1918
* பேரா.சி.எல்.ரென் 1920-1921
* பேரா.எம்.ரத்னசுவாமி (முதல் இந்திய முதல்வர்) 1921-1927
* பேரா.கே.சின்னத்தம்பி பிள்ளை 1927-1935
* பேரா.பி.என்.சீனிவாசாச்சாரி 1935 -1938
* பேரா.டி.எஸ்.சர்மா 1938-1941
* பேரா.வி.திருவேங்கடசாமி 1941-1942
* பேரா.பி.வி.நாராயணசாமி நாயுடு 1942-1947
* பேரா.ஆர்.கிருஷ்ணமூர்த்தி 1947-1961
* பேரா.சி.டி.ராஜேஸ்வரன் 1961-1963
* பேரா.டி.எஸ்.சங்கரநாராயணப் பிள்ளை 1963-1965
* பேரா.முனைவர்.சுப.சண்முகநாதன் 1966 -1982
* பேரா.எம்.கே.தசரதன் 1982-1984
* பேரா.டி.ஆர்.ராமச்சந்திரன் 19984-1985
* பேரா.ஜி.நாகலிங்கம் 1985-1986
* பேரா.என்.பி.கல்யாணம் 1986-1987
* பேரா.ஜி.நாகலிங்கம் 1987-1989
* முனைவர்.ஏ.பி.கமலாகர ராவ் 1989-1994
* முனைவர்.ஆர்.எஸ்.ராகவன் 1995-1999
* முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் 1999-2002
* முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி 2002-2003
* முனைவர்.டி.வி.ராஜேந்திரன் 2005-2008

[2]
[தொகு] கல்வித்திட்டங்கள்

* பட்டப் படிப்புகள்:
o இளங்கலை(B.A):வரலாறு, பொருளியல், மெய்யியல், தமிழ், ஆங்கிலம், கணிதம்.
o இளங்கலை அறிவியல் (B.Sc.): இயற்பியல், வேதியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரியல், கணினி அறிவியல்
o இளங்கலை வணிகம் (B.Com.): நிறுவன செயலர்
o இளங்கலை கணினி செயல்பாடு: (B.C.A.)
* பட்டமேற்படிப்புகள்:
o முதுகலை (M.A.): வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்
o முதுகலை அறிவியல் (M.Sc.):நுண்ணுயிரியல் செயல்பாடு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்
o முதுகலை வணிகம் (M.Com)
o முதுகலை கணினி அறிவியல் (M.C.S.)
o முதுகலை கணினி செயல்பாடு (M.C.A.)
* ஆய்வுத் திட்டங்கள்:
o M.Phil. : வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்
o Ph.D. :வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்

[தொகு] பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்

இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும்,அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியலுக்கு அவர்களது தளத்தில் உள்ளது[3]. அவர்களில் சிலர்:

* சீனிவாச இராமானுஜன்: கணிதவியலாளர்
* பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக ஆசிரியர்
* கா. ந. அண்ணாதுரை: முன்னாள்தமிழக முதல்வர், 1967-69
* மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார், மக்களவை தலைவர்.
* நாவலர் நெடுஞ்செழியன்: அரசியல்வாதி
* பேரா. க. அன்பழகன்: அரசியல்வாதி
* ஈ. வி. கே. சம்பத்: அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்களில் ஒருவர்.
* சி. விஜயராகவாச்சாரியார்: இந்திய தேசிய காங்கிசின் முன்னாள் தலைவர்
* நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்: முன்னாள் நாடக மற்றும் திரைப்பட நடிகர்
* ஏ. எம். ராஜா: முன்னாள் திரைப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
* காசு பிரம்மானந்த ரெட்டி: முன்னாள் ஆந்திர முதல்வர், 1964 - 71
* கே. சி. ரெட்டி: பழைய மைசூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்
* வைரமுத்து: கவிஞர்
* சி. ஆர். ரங்காச்சாரி: முன்னாள் துடுப்பாட்ட வீரர், இந்திய துடுப்பாட்ட அணி உறுப்பினர்
* முரசொலி மாறன்: அரசியல்வாதி
* ராபின் சிங்: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
* பரத் ரெட்டி: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
* மாமிடிபுடி வெங்கடரங்கைய்யா-வரலாற்றாசிரியர்
* முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி - வரலாற்றாசிரியர் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்
* டி. இமாம்- இசையமைப்பாளர்
* தாபி தர்மா ராவ்: தெலுங்கு இதழாளர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

[தொகு] மேற்கோள்கள்

1. ↑ 1.0 1.1 Barlow,Glyn:"The Story of Madras",Project Gutenberg, EBook #26621:Release date=செப்டம்பர் 14,2008
2. ↑ http://www.pachaiyappaschennai.net/principals.htm
3. ↑ Pachaiyappa's College web site

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்: தமிழ்நாட்டுக் கல்லூரிகள் | சென்னைக் கல்லூரிகள்

திமுக

.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திராவிட முன்னேற்றக் கழகம்
திமுகவின் தேர்தல் சின்னம்
தலைவர் மு.கருணாநிதி
பொதுச் செயலர் க.அன்பழகன்
மக்களவைத் தலைவர் ஏ. கே. எஸ். விஜயன்[1]
நிறுவல் செப்டம்பர் 1949
தலைமையகம் அறிவாலயம், அண்ணா சாலை, சென்னை - 600018
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (1999-2004)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-இன்று)
கொள்கை நிலை சமூக மக்களாட்சி/Populist
வெளியீடுகள் முரசொலி
தொழிலாளர் அமைப்பு Labour Progressive Federation
வலைத்தளம் http://www.dmk.in
Flag DMK.jpg
கட்சிக் கொடி
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ( தி. மு. க., Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டின் ஒப்பில்லா அரசியல் கட்சியாகும்.தந்தை பெரியார் என தனது தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடக்கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்.

அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி.மு.க.வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது 1953 ஜூலை 14, 15-ல் அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2-வது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2-ல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. 19.4.1961-ல் அக்ககட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961-ல் திமுக பேரணி நடத்தியது 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963-ல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17-ல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. 1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.
பொருளடக்கம்
[மறை]

* 1 தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலம்
* 2 15வது மக்களவைத் தேர்தல்
* 3 மேற்கோள்கள்
* 4 வெளி இணைப்புகள்

[தொகு] தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலம்

தி.மு.க. 1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.

1969-ல் கலைஞர்மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின் கலைஞர், தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1971-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. கலைஞர், 2-வது முறையாக முதல்வர் பொறுப்போற்றார்.

1972 அக்டோ¡ர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20-ல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

1975 ஜுன் 25-ல் இந்திய அரசு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை யடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவற்றை முக்கியமானவையாக குறிப்பிடலாம். 1977 ஜூலை 4-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க. இருப்பினும் 1980-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. அளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.

1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.

1993 அக்.11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ (வை. கோபால்சாமி) நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

புதுவை, காரைக்கால், கர்நாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.

இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதீய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, பாரதீய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.



திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
தமிழியக்கம்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
[[]]
நபர்கள்
பெரியார்
அண்ணாத்துரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
தமிழ்த் தேசியம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு
[தொகு] 15வது மக்களவைத் தேர்தல்

ஐக்கிய முன்னனியின் அங்கமான திமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் விபரம் [2]

* சிறீபெரும்புதூர் - த. ரா. பாலு
* தர்மபுரி - தாமரைச்செல்வன்.
* நாமக்கல் - காந்தி செல்வன்.
* நீலகிரி (தனி) - ஆ. ராசா
* மதுரை - மு.க. அழகிரி.
* கன்னியாகுமரி - கேலன் டேவிட்சன்.
* தூத்துக்குடி - செயதுரை.
* திருவண்ணாமலை- வேணுகோபால்
* நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எசு. விஜயன்.
* அரக்கோணம் - செகத்ரட்சகன்.
* வட சென்னை - டி.கே.எசு. இளங்கோவன்
* மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
* கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
* கிருஷ்ணகிரி - சுகவனம்.
* பெரம்பலூர் - நெப்போலியன்.
* தஞ்சாவூர் - எஸ். எஸ். பழனிமாணிக்கம்.
* இராமநாதபுரம் - ரித்தீசு

[தொகு] மேற்கோள்க

அ.தி.மு.க.

வரலாறு

காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
[தொகு] எம்.ஜி.ஆர். காலம்

எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[2] நான்முனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.

சினிமா துறையில் உள்ளவர்களும் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்ற இப்போதைய அரசியல்வாதிகளுக்கே முன்னோடியாக இருந்தும் இருப்பவரும் எம்.ஜி.ஆர் தான். இவரைப் பின் தொடர்ந்துதான் என்டி.ராமராவ் ஆந்திராவில் நின்று வெற்றிபெற்றார். அதோடு பிரசாரத்திற்கே செல்லாமல் நின்று வெற்றிப்பெற்றவர் என்ற பட்டத்துக்கும் பெருமையானவர் எம்.ஜி.ஆர்.

ஏழைகளின் உண்மையான தலைவன் எம்.ஜி.ஆர் என்றே பலரும்[எவர்?] கூறுகின்றனர். அனைத்துதரப்பு மக்களையும் மிக நேர்த்தியாக கவர்ந்த ஒரு மா மனிதர் எம்.ஜி.ஆர் என்றே பலரும்[எவர்?] கூறுவதுண்டு.
[தொகு] அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள்.

எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறிதான் ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.
[தொகு] 15வது மக்களவை

15வது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[3] 1. திருவள்ளூர் (தனி) 2. தென்சென்னை 3. விழுப்புரம் (தனி) 4. சேலம் 5. திருப்பூர் 6. பொள்ளாச்சி 7. கரூர் 8. திருச்சி 9. மயிலாடுதுறை
[தொகு] தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்
வருடம்↓ பொதுத்தேர்தல்↓ கிடைத்த வாக்குகள்↓ வெற்றிபெற்ற தொகுதிகள்↓ வேட்பாளர் பட்டியல்↓
1977 6வது சட்டசபை 5,194,876 131 [1]
1977 6வது மக்களவை 5,365,076 17
1980 7வது சட்டசபை 7,303,010 129 [2]
1980 7வது மக்களவை 4,674,064 2
1984 8வது சட்டசபை 8,030,809 134 pdf
1984 8வது மக்களவை 3,968,967 12
1989 9வது சட்டசபை 148,630 2 pdf
1989 9வது மக்களவை 4,518,649 11
1991 10வது சட்டசபை 10,940,966 164 pdf
1991 10வது மக்களவை 4,470,542 11
1996 11வது சட்டசபை 5,831,383 4 pdf
1996 11வது மக்களவை 2,130,286 0
1998 12வது மக்களவை 6,628,928 18
1999 13வது மக்களவை 6,992,003 10
2001 12வது சட்டசபை 8,815,387 132 pdf
2004 14வது மக்களவை 8,547,014 0
2006 13வது சட்டசபை 10,768,559 61 pdf
2009 15வது மக்களவை 6,953,591 9
[தொகு] புதுச்சேரி
வருடம்↓ பொதுத்தேர்தல்↓ கிடைத்த வாக்குகள்↓ வெற்றிபெற்ற தொகுதிகள்↓
1974 3வது சட்டசபை 60,812 12
1977 4வது சட்டசபை 69,873 14
1977 6வது மக்களவை 115,302 1
1980 5வது சட்டசபை 45,623 0
1985 6வது சட்டசபை 47,521 6
1990 7வது சட்டசபை 76,337 3
1991 8வது சட்டசபை 67,792 6
1996 9வது சட்டசபை 57,678 3
1998 12வது மக்களவை 102,622 0
2001 10வது சட்டசபை 59,926 3
2006 11வது சட்டசபை 3

வி. நவரத்தினம்

வி. நவரத்தினம் (அக்டோபர் 18, 1910 - டிசம்பர் 22, 2006) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, இலத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்திலிங்கம் தம்பதிகளுக்குப் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
[தொகு] தமிழரசுக்கட்சியில் இணைதல்

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து 1947 டிசம்பர் 17 இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். 1952 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பங்காற்றினார்.
[தொகு] தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றம்

ஊர்காவற்றுறை தொகுதியில் 1965 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த மசோதா (டட்லி அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது.
[தொகு] தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தல்

தமிழரசுக்கட்சியிலிருந்து வெறியேறிய நவரத்தினம் தமிழ் ஈழக் கோரிக்கையின் கருவூலமான தமிழர் சுயாட்சிக் கழகத்தை 1969 ஆகஸ்ட் 27 இல் ஆரம்பித்தார். அவருடன் செனட்டர் மாணிக்கம், சிவானந்தசுந்தரம், சட்டத்தரணிகள் கோடீஸ்வரன், என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1970, 1977 தேர்தல்களில் ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களுக்கெதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.
[தொகு] இயற்றிய நூற்கள்

* இலங்கை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது (1956)
* தமிழ்த் தேசியத்தின் எழுச்சி (1995)
* திருவெம்பாவை (2004)
* தமிழர் பூர்வீக சரித்திரம் (ஆங்கிலம், 2004)

[தொகு] மறைவு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் டிசம்பர் 22, 2006 வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் தமது 97வது வயதில் காலமானார்.
[தொகு] நாட்டுப்பற்றாளர் விருது

வி. நவரத்தினத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளனர்[1].


[தொகு] வெளியிட்ட நூற்கள்

* இலங்கைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது (1956)
* தமிழ்த் தேசியத்தின் எழுச்சி (1995)

[தொகு] அடிக்குறிப்புகள்

1. ↑ வி.நவரத்தினத்துக்கு புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் (தமிழ்நெட்)

[தொகு] வெளி இணைப்புக்கள்

* இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார் (புதினம்)
* Doyen of FP, uncompromising on Tamil National question (Tamilnet)
* 1972 Sri Lanka Constitution illegal - Navaratnam
* நவரத்தினம் காலமானார் (தினக்குரல்)
* வி.நவரத்தினத்துக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் (புதினம்)

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" இருந்து மீள்விக்கப்பட்டது

எம்ஜிஆர்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
Mgr4R.jpg
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
பிறப்பு ஜனவரி 17, 1917
நாவலப்பிட்டி, இலங்கையின் கொடி இலங்கை
இறப்பு டிசம்பர் 24, 1987
தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
பிள்ளைகள் கிடையாது

எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.[3]
[தொகு] திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.

தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.

நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதி கல்கி இதழில் தொடராக வெளிவந்த கயல்விழி என்னும் புதினத்தின் அடிப்படையிலானது இது.

தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். இவற்றில் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கியிருந்தார்.
[தொகு] அரசியல் வாழ்க்கை
ம.கோ.இரா-வின் அம்பாசடர் கார்

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும்,[ஆதாரம் தேவை] தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[4] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[சான்று தேவை] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
[தொகு] தமிழ் ஈழத்திற்கு உதவி

பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.

புலிகளின் போராட்டம் வெல்ல தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர். உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதி காப்புப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது.
[தொகு] எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

* ராஜ ராஜன்
* ராஜகுமாரி
* மன்னாதி மன்னன்
* மந்திரி குமாரி
* திருடாதே
* மலைக்கள்ளன்
* அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
* மதுரை வீரன்
* புதுமைப்பித்தன்
* ஆயிரத்தில் ஒருவன்
* அன்பே வா
* எங்க வீட்டுப் பிள்ளை
* நாடோடி மன்னன்
* படகோட்டி
* ரிக்ஷாக்காரன்
* உலகம் சுற்றும் வாலிபன்
* ராமன் தேடிய சீதை
* அடிமைப்பெண்

[தொகு] சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
[தொகு] விருதுகள்

1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
4. பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

[தொகு] திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
4. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
5. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
6. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

[தொகு] பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

1. கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்
8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்

[தொகு] நினைவிடம்

தமிழ்நாடு அரசு ம.கோ.இராமச்சந்திரன் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மு. கருணாநிதி,

மு. கருணாநிதி, (ஆங்கிலம்: M. Karunanidhi) (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதலமைச்சரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர்.ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
இளமைப்பருவம்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.
[தொகு] அரசியல்
[தொகு] மாணவர் மன்றம்

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.
[தொகு] முரசொலி நாளிதழ்

இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.
[தொகு] இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: மொழிப்போராட்டம்”.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்கள்து கட்சியின் அரசியல் கொள்கை..“ மேலும்”இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்து செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றும் அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யபட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
[தொகு] சட்டமன்ற உறுப்பினர்

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
[தொகு] பொருளாளர்

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன், பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

* 1969-1971 -- கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
* 1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
* 1989-1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
* 1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
* 2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி

[தொகு] விமர்சனங்கள்

1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[1],[2] [3] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன் [4] [5] 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. .

2008 - 2009 இல் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணாநிதி, ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமையைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறிக்கொண்டார்.[1]. இதன் விளைவாக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
[தொகு] குடும்பம்

மனைவிகள்

* பத்மாவதி
* ராசாத்தி அம்மாள்
* தயாளு அம்மாள்



மகன்கள்

* மு. க. முத்து
* மு. க. அழகிரி
* மு. க. ஸ்டாலின்
* மு. க. தமிழரசு



மகள்கள்

* செல்வி
* கனிமொழி

மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), தற்பொழுது (2009) தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் .மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.
[தொகு] தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.

இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.
[தொகு] திரைப்படப் பணி
[தொகு] கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

* கண்ணம்மா
* மண்ணின் மைந்தன்
* பராசக்தி
* புதிய பராசக்தி
* மந்திரிகுமாரி
* பாலைவனப்பூக்கள்
* மனோகரா
* உளியின் ஓசை
* பூம்புகார்

மேலும் பல...
[தொகு] மேடை நாடகங்கள்

* சிலப்பதிகாரம்
* மணிமகுடம்
* ஒரே ரத்தம்
* பழனியப்பன்
* தூக்கு மேடை
* காகிதப்பூ
* நானே அறிவாளி
* வெள்ளிக்கிழமை
* உதயசூரியன்

மேலும் பல...
[தொகு] புத்தகங்கள்

* குறளோவியம்
* நெஞ்சுக்கு நீதி
* தொல்காப்பிய உரை
* சங்கத் தமிழ்
* ரோமாபுரி பாண்டியன்
* தென்பாண்டி சிங்கம்
* வெள்ளிக்கிழமை
* இனியவை இருபது
* சங்க தமிழ்
* பொன்னார் சங்கர்
* திருக்குறள் உரை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
Ceylon Workers' Congress
Flag of Ceylon Workers' Congress.svg
இலங்கையின் அரசியல் கட்சிகள்இலங்கையின் கொடி
தலைவர் ஆறுமுகன் தொண்டமான்
பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்
தொடக்கம் 1939
தலைமையகம் கொழும்பு
கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
இது இலங்கை அரசியல் தொடர்பான தொடரின் கட்டுரையாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இது இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது, இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பெயர் மாற்றம் ஏற்பட்டது. இது பொதுவாக இந்திய வம்சாவளி தழிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார்.

[தொகு] இந்திய எதிர்ப்பலைகள்

1900 களின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு அலைகளை எழத்தொடங்கியிருந்தன. இலங்கை, இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தியது மேலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறும் படி நிர்பந்தித்து வந்தது. இதனால் தோட்டப்புரங்களிலும் கொழும்பிலும் பிறந்து வழர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மற்றும் மலையாளிகள் பல இன்னகளுக்கு முன் கொடுத்து வந்தனர். சிங்கள மகா சபை இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான பல போரட்டங்களை நடத்தி வந்த்தது.
1939 அரசவையில் இரண்டு தீர்மானங்கள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. முதலாவது 15, 000 இந்தியர்களை நாடுகடத்தும் தீர்மானம் இரண்டாவது அரச சேவையில் இருந்த சகல இந்தியர்களையும் நாடுகடத்தல் என்பனவாகும். இதன் போது கொழும்பில் ஒன்று கூடிய இந்திய சங்களின் பிரதிந்திகள் இவ்விடயத்தை இந்திய தேசிய காங்கிரசிடமும் மகாத்மா காந்தியிடமும் கொண்டு செல்வதாக தீர்மானித்தது. அப்போது இலங்கை அரசவை பிரதிந்திகளாக இருந்த வைத்தியலிங்கம், பெரெய்ரா என்ற இருவரும் இந்தியா சென்று காந்தியை சந்த்தித்தனர். காந்தி தனது விசேட பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். யூலை 18 1939 இல் நேரு கொழும்பு வந்தார். அவர் அப்போதைய அரசவை தலைவர் டி. எஸ். சேனநாயக்காவையும் சில அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார் பேச்சுக்கள் பலனற்றுப் போகவே, நேரு இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை சந்தித்து அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார்.

[தொகு] இலங்கை இந்திய காங்கிரஸ்

நேரு இலங்கையில் இந்திய தேசிய காங்கிரசையொத்த இலங்கை இந்திய காங்கிரஸ் (இ.இ.கா.) என்ற அமைப்பை உருவாக்கி இலங்கை வாழ் சகல இந்தியர்களையும் அதன் கீழ் கொண்டுவரும்படி இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை கொழும்பில் ஒன்று கூட்டினார். யூலை 24 1939 இல் நேரு தலைமையில் ஒன்றுகூடிய, அப்போது இலங்கையில் இருந்த பிரதான இந்திய சங்களான இலங்கை இந்திய மத்திய சபை மற்றும் இலங்கை இந்திய தேசிய காங்கிரஸ் என்பவற்றின் பிரதிந்திகள் யூலை 25 1939 காலை 1.20 க்கு இலங்கை இந்திய காங்கிரசை உருவாக்கினார்கள். இவ்வதிகாலை கூட்டத்தில் உருவாக்கப்பட்ட இடைக்கால சபையில் 18 பேர் அங்கம் வகித்தனர். மேலதிக 7 பிரதிநிதிகள் வேறு சபைகளில் இருந்து உள்வாங்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டது. 18 பிரதிநிதிகளும் இலங்கை இந்திய காங்கிரசின் உருவாக்க பத்திரத்தில் கைச்சாத்திட்டனர். நேரு சாட்சியாகவும் உறுதிப்படுத்துபவராகவும் கைச்சாத்திட்டார். வீ.ஆர்.எம்.வீ.ஏ. இலக்ஷ்மனன் செட்டியார் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். எச்.எம்.தேசாய் மற்றும் ஏ.அசிஸ் என்பவர்கள் இணைச் செயளாலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டனர். அன்றே நேரு தலைமையில் இ.இ.காவின் யாப்பு எழுதப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணி

1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி ((சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.
1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

தமிழ்க் காங்கிரஸ்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.
Stub W ta.svg இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்

தமிழரசுக் கட்சி

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடி
படிமம்:FP sympol.png
தமிழரசுக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கையின் ஓர் அரசியற் கட்சியாகும். மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.
1956ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.
1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கைமீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.
1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.
இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது.

ஜீ. ஜீ. பொன்னம்பலம்

ஜீ. ஜீ. பொன்னம்பலம் (கனபதி காங்கேசர் பொன்னம்பலம், G. G. Ponnambalam, நவம்பர் 8, 1901 - பெப்ரவரி 9, 1977) இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாறு

பொன்னம்பலம், 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர், தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் கேம்பிரிட்ஜ் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

[தொகு] அரசியல் வாழ்க்கை

1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்க சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.
1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட இரசாயனத் தொழிற்சாலையும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் இவற்றுள் முக்கியமானவை.

[தொகு] செல்வாக்குச் சரிவு

தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வித்தியாசம் குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார்.
1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் வெற்றி பெற்றனர்.
1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.

[தொகு] அரசியல் மாற்றங்கள்

1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பல தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியல் இவர் நேரடியாக இறங்கவில்லை.
தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.
இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் அவர் காலமானார்.
அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.