ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கஸ்பர் ராஜுக்கு பதிலடி

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்- தமிழ் தேசிய போலிகளின் கூடாரம்

Posted Image


மக்கள் தன்னர்வ எழுச்சி ஏற்படும் போதொல்லாம் அவர்களை கட்டுபடுத்துவதற்கு அவர்கள் வழியிலே சென்று லகானை பிடித்து தன்னார்வ போராட்டங்களை மழுங்கடிக்க செய்வார்கள்.. உலகின் பெரும் பால ஏகாதிபத்திங்கள் பொதுவாக கடைபிடிக்கும் வழி முறை.. அந்த வகையில் பொந்திய அரசு ஈழ பிரச்சனையை அடக்க தேர்வு செய்தது.. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை.. மக்களிடம் இவ்வாறன வர்கள் களம் இறங்கும் போது ..மக்கள் மனநிலை இவர்களோ பொது தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு மற்ற அரசியல் வாதிகளை போல இந்த விடயத்தில் என்ன லாபம் வந்துவிடபோகிறது..பொது நலத்தோடு தான் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கும்.. சூடான் இனபடுகொலைகள், ஈராக்,ஆப்கானிஸ்தான்,போஸ்னியோ போன்ற இடங்களில் எல்லாம் இவ்வாறன பொது தொண்டு நிறுவனங்களின் சேவை(?) ஏகாதிபத்தியங்களுக்கு தேவை பட்டே வந்துள்ளன..

உண்மையில் யார் இந்த பகத் பாஸ்பர்?

நாம் என்ற அரசு சார பொது தொண்டு நிறுவனத்தின் தலைவர்(?) அல்லது ரோ உளவாளி..
இவ்வாறன பாதிரி இயக்கம் ஆரம்பிக்கலாமா ? அதற்கு அவர்கள் திருச்சபை அனுமதி அளிக்குமா என்பதெல்லாம் வேறு கதை..

உண்மையில் தமிழர் நாட்டில் எப்போது தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறார்.. இதற்கு முன்னால் சில சிலுப்பு பொய்களை அவிழ்த்துவிட்டு கொண்டிருந்தார்..சூசை கடைசிநாள் அன்று பேசினாராம் ..பொந்தியா வெள்ளை கொடியோடு வரசொன்னதாம்.. வந்தார்களாம் சுட்டு கொன்றுவிட்டார்களாம்.. நீலி கண்ணீர் வடித்து ஊரை ஏமாற்றுகிறார்..

. இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த பகத் பாஸ்பர் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள் தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் பகத் பாஸ்பர் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று பகத் பாஸ்பர் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?


இது போகட்டும் இவர்களுடைய அமைப்பின் கொள்கை என்ன என்று கேட்டுபாருங்களேன் பொந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்ற போகிறார்களாம்!.. லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்தே இவர்களின் வெளியுறவு கொள்கையின் அம்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது(மலையக தமிழர்களை நாடற்றோர் ஆக்கியது)..காண்க காணோளி


()
இறுதிக் கட்டம்! அறியாத தகவல்கள்
அருட் தந்தை கஸ்பர் ராஜ்
Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010
2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.

இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?
Posted Image

இறுதிகட்டம்- நடந்தது என்ன

இறுதிகட்டம்- நடந்தது என்ன?

புதன்கிழமை, 13 ஜனவரி 2010 04:15 |
தங்களிடம் சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் சிங்கள இராணுவத்தினர் மண்டியிட வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய யுத்தத்தின் இறுதி நாட்களில் முக்கிய தலைவர்களான நடேசனும் புலித்தேவன் போன்றவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை சிறிலங்கா அரசு அப்போது மறுத்திருந்தது. ஆனால் சிறிலங்கா இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபற்றிய தகவலை வெளியிட்டார். பின்னர் அவரே அதனை மறுத்தார்.

தற்போது அந்த கொடூர சம்பவம் குறித்து சிறிலங்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டி.பி.எஸ்.யேசப் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியை முற்றாக சுற்றிவழைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருந்தது.

அதன்படி விடுதலைப்பலிகளின் ஒரு அணி இராணுவத்திற்கு எதிரான கடைசிநேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றினை மேற்கொண்டு முற்றுகைக்குள் இருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல் துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது எனவும் இத்திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி சரணடைதல் தெர்டர்பான விடயத்தை விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.

ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் கொழும்பில் இருந்த மூன்று மேற்குலக நாடுகளின் தூதுவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயர் அதிகாரிகள் பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுடன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடாத்தினார்.

மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக இங்கிலாந்து ஊடகவியலாளர் கெல்வின் ல்வின் ஐநா செயலாளர் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை காலை 5.00 மணிக்கு எழுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐநா அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார் இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைபவர்களின்
பாதுகாப்பிற்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை நடேசனுடன் தொடர்பில் இருந்த இன்நொருவரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரச தலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்பி மகிந்த ராசபக்சவிடம் கூறினார். அதற்கு பதிலளித்த ராசபக்சே “போர் நடைபெறும் பகுதிக்கு பாதுகாப்பு அல்ல அங்கு செல்ல வேண்டாம். பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் உத்தரவாதம் அளிப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

மே-18ம் திகதி காலை 6.30மணியளவில் தொடர்பு கொண்ட சந்திரகாந்தன் எம்பி சரணடையும் விடுதலைப்பலிகளின் பாதுகாப்பிற்கு சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அதனால் சரணடையும்படி தான் நாளை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பின்னர் மேற்குலக நாடொன்றில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் பேசிய நடேசன் தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவதே மேல் என்றும் கூறியிருந்தார்.

புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு

இதன் பின்னர் சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரகாரம் நடேசன் புலித்தேவன் ஆகியோர் தலைமையில் பத்து முதல் பதினைந்து வரையிலானோர் முன்னே வெள்ளைக் கொடியை ஏந்திச் செல்வது என்றும் அவர்களிற்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னால் தளபதி ரமேஸ் மற்றும் இளங்கோ தலைமையில் முப்பது முதல் நாற்பது வரையிலானோர் வெள்ளைக் கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தின் மனித நேயம் அறவே இல்லாத 59வது டிவிசன் படையணியைவிட 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58வது டிவிசன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீமாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59வது டிவிசன் படையணியின் தளபதி பிரசன்ன டீ சில்வா தனது படையணியின் நான்பெமர குழுவினரை நகர்த்தினார். 59வது டிவிசன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்படன் கோசல விஜயகோன் தலைமையிலும் டெல்ரா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியே பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்ரா பிரிவுக்கு மேஜர் விபுல திலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப் பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடடுமும் வழங்கப்பட்டது.

அப்போது நடேசன் புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர்(பத்து பதினைந்து பேர்) கைகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஸ் இளங்கோ தலைமையில் (நாற்பது நாற்பத்தைந்து பேர்) சரணடைவதற்கு வந்து கொண்டிருந்தனர்.

நடேசன் தலைமையிலானோர் படுகொலை.

நடேசனது தொகுதிலiனரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்துச் சென்ற அதே வேளை ரமேஸ் தலைமையிலானவர்களை சுமார் நூறு மீட்டர் தொலைவில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் கரையில் முழங்காலில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர் அவர்களை சுடுவதற்று தயாராகினர். சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது.

உடனே வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுட வேண்டாம் என்று அழுது குளறியபடி எழுந்து சென்று கணவனுக்கு அருகில் செல்லஇ கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்த போது அங்கு நின்று கொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல்3நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில் காவலரண் பகுதிக்குள் கூட்டிச் செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஸ் குழுவினர் உடணடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத் தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும் படி கத்தியபடி கலைத்துச் சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஓடும் போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓடமுடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்து விட்டனர். இதனை அடுத்து கலைத்துச் சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலையே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்று தள்ளினர். அந்த கூட்டத்தில் இருந்து ஒருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

மிகப்பெரும் கொடூரம்

இந்தப் படுகொலைப் படலம் போர் முடிவுற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால் சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது தன்னைக் கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராசபக்சே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவில் இருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம் பெற்றதா என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகின்றது.

மறைக்க முடியாது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்தப் படுகொலைவிடயத்தை அரசு இலகுவில் மறைத்துவிட முடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்கக் கூடிய அளவிற்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப் பேரழிவைப் பற்றி எழப்போகின்ற கரிsa னைகளையும் அதனையொட்டி எழுப்பப் படப்போகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தல் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்கா பாதுகாத்துவரும் “சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர் நெருக்கடியான நிலை ஒன்றிற்குள் தள்ளப்படுவார்கள்.

காந்தி சுடப்பட்டது எவ்வாறு?

காந்தியின் மரண வாசல்

காந்தி சுடப்பட்டது எவ்வாறு?

1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.

காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.

"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.

பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.

"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.

யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.

எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.

இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.

சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.

போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.

அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.

டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

தமிழர் வரலாறு அங்கம் 5

தமிழர் வரலாறு அங்கம் 5

காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்
பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்
இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ். ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத் தேர்தலிலும் படித்த கண்டிச் சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.

சட்டவாக்கு அவையில் உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக 1922 – 1924 வரை பணியாற்றியவர்.

1924 ஆம் ஆண்டு ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டு வலிகாமம் வடக்குத் தொகுதியில் இராமநாதன் போட்டியிட்டு வென்றார். இந்தப் பதவியில் அவர் இறக்கும் வரையில் (நொவெம்பர் 26, 1930) தொடர்ந்து இருந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு அகவை எண்பது ஆகும்.

அதாவது 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இராமநாதனின் ஆளுமைக்குட்பட்ட அரசியல் இலங்கையில் கோலோச்சியது என்றால் அது மிகையல்ல.

பொன். இராமநாதன் ஆண், பெண் இருபாலாருக்கும் தாய்மொழியில் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என வாதாடியவர். அதே போல் கட்டாய சமயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடியவர்.

நான் முன்னர் குறிப்பிட்டது போல இராமநாதன் யாழ்ப்பாணக் குடாநாட்டு சைவசமய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இமாலய சாதனையாக இரண்டு கல்லூரிகளைக் கட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் மகளிர் படிப்பதற்கு 1913 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரியையும் எட்டு ஆண்டுகள் கழித்து இளைஞர் படிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியையும் நிறுவியவர்.

சிங்கள மக்கள் தமது இனவுணர்வு. மொழியுணர்வு அற்ற நிலையில் தம் தனித்துவத்தை இழக்கும் ஆபத்திற்குள்ளாகி இருந்த போது “lf Sinhala lips will not speak the Sinhala Language who else there to speak it” (சிங்களவர்கள் சிங்களத்தைப் போசாதுவிடின் வேறு யார் சிங்களத்தை பேசவர்;) என்று 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் ஆனந்தா கல்லூரியில் இராமநாதன் பேசிய பேச்சுத்தான் சிங்களவர்களை இனவுணர்வும். மொழியுணர்வும் கொள்ளச் செய்தது.

1915 சிங்கள ,- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. படைத்துறைச் சட்டத்தை (Martial Law) பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர். சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். .இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறையைக் கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்ச் சு10ழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று பிரதமருடனும் மற்ற அமைச்சர்களுடனும் பேசிக் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் பிறப்பித்த படைத்துறைச் சட்டம் (Martial Law) திரும்பப் பெறப்பட்டது. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் திருப்பி அழைக்க வைத்தார்.

வெற்றியோடு இராமநாதன் இலங்கை திரும்பினார். அவரை வரவேற்பதற்கு சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் கொழும்புத் துறைமுகத்தில் கால் கடுக்கக் காத்திருந்தனர். இராமநாதனை அழைத்துப் போக குதிரைகள் பூட்டிய தேர் காத்திருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட சிங்களவர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு இராமநாதனைத் தேரில் வைத்து தாமே குதிரைகளாக மாறி காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் இருந்த அவரது சுகஸ்தான் மாளிகை வரை இழுத்து வந்தனர்.

"எமது நெருக்கடியான கால கட்டத்தில் வடக்கிலிருந்து வந்த இவ்வீர மகன் எமக்குத் துணை போகாது விட்டிருந்தால் சிங்கள இனமே பூண்டோடு அழிந்திருக்கும்" என்று சிங்களத் தலைவர்கள் பாமாலை பாடி புகழ்மாலை பாடினார்கள்.

இந்தக் காட்சி ஓவியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப மேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு அருங்காட்சியம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

சிங்களவர் – முஸ்லிம் கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும் படைத்துறைச் சட்டமும்" என்ற நூலையும் எழுதினார்.

1915 இல் தூக்குக் கயிற்றில் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றிய இராமநாதனைப் பாராட்டு முகமாக அவருக்கு ஒரு சிலை எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இச்சிலை செதுக்கப்பட்ட போதும் அது எழுப்பப்படவில்லை. அது ஒரு பண்டகசாலையில் தேடுவாரற்றுக் கிடந்தது.

பவுத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறை நாள் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்தார்.

இதே இராமநாதன் 1919 இல் தன் தம்பி சேர். பொன். அருணாசலம் தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தன்னிடம் வாழ்த்துப்பெற வந்தபோது “தம்பி முன்னேறு. ஆனால் உன் நாற்காலியிலிருந்து நீ தூக்கி எறியப்படும் ஆபத்து உண்டு” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை வீண்போகவில்லை.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஒரு அரசியல்வாதி படியாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுப்பதைக் கடைசிவரை கடுமையாக எதிர்த்தது வியப்பை அளிக்கிறது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளித்தால் பெரும்பான்மை சிங்களவர்களது கைகளுக்கு ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக அதனை எதிர்த்தார் என்பதற்கு "டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை. நாங்கள் அதிகாரத்தை ஒரு பண்பில்லாத கும்பலிடம் கையளிகப் போகிறோம். போதிய பாதுகாப்பின்றி நாம் இந்த அரசியல் யாப்பை ஏற்போமானால் தமிழர்களுக்கு அது ஒரு சாவுமணியோசையாக இருக்கும்" என்ற வாக்கியத்தை விட வேறு வலுவான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இராமநாதன் இவ்வாறு எச்சரித்ததை "கிழவனின் பிதற்றல்" என சிங்களவத் தலைவர்கள் எள்ளி நகையாடினர். தமிழ்த் தலைவர்கள் பலர் இவரின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "முத்தி நெறி அறியாத மூர்கரோடு முயல்வேனை" என்ற திருவாசகப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

1919 ஆண்டுக்குப் பின்னர் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இராமநாதன் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்களுக்குச் சார்பாக அமைந்திருந்தன என்று கருதப்பட்டது. குறிப்பாக வகுப்புவாத பிரதிநித்துவ அடிப்படையை நீக்கி ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடைபெறும் போது சிறுபான்மையினரைக் - குறிப்பாகத் தமிழரை அது பாதிக்கும் - என்று இராமநாதன் வாதிட்டது சிங்கள – பவுத்த தலைவர்களது கோபத்துக்கும் வெறுப்புக்கும் அவரை உள்ளாக்கியது. இந்த நிலையில் அவரின் சிலையைக் கடலில் தூக்கியயெறியத் சில சிங்களத் தலைவர்கள் சதி செய்தனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற புகழைத் தட்டிக்கொண்ட டி.எஸ். சேனநாயக்கா இராமநாதனின் இறுதிக்காலத்தில் அவரோடு பல விடயங்களில் மாறுபட்டிருந்தார். எனினும் அவர் மறைந்த போது எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த இலங்கையர் (The Greatest Ceylonese of all time) என்று கூறினார். பெரும்பாலும் இது வஞ்சகப் புகழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்களை நம்பவைத்து கழுத்து அறுத்ததில் அதிலும் நோவாமல் அறுத்ததில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்த டி.எஸ். சேனநாயக்காவை யாரும் விஞ்சமுடியாது.

தனது அமைச்சரவையில் அருணாசலம் மகாதேவா, பேராசிரியர் சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வைத்துக்கொண்டுதான் கிழக்கில் பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றங்களை மும்மரமாகச் செய்து முடித்தார். அதற்கு அப்போது சொல்லப்பட்ட காரணம் தெற்கில் நெருக்கமாக வாழும் சிங்களவர்களுக்குப் புதிய நீர்ப்பாசன திட்டங்களில் காணிகள் கொடுத்து குடியமர்த்தப் படுகிறார்கள் என்பதே.

இராமநாதன் இறந்த மறுநாள் இலங்கை Daily News செய்தித்தாளில் வெளிவந்த ஆசிரிய தலையங்கம் "இராமநாதன் இலங்கையின் மிகவும் ஆளுமைபடைத்த தலைவர்" என வருணித்தது. இலண்டனில் இருந்து வெளியாகும் Times of London செய்தித்தாள் இராமநாதனை "நவீன இலங்கையின் நிறுவனர்" (Founder of modern Ceylon) என எழுதியது.

இலங்கையின் வரலாற்றில் இராமநாதனைப் போல் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சிங்களவர்கள் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு. பேராசிரியர் சி. சுந்தரலிங்கம், வி. நல்லையா, சு.நடேசன், ஜி.ஜி. பொன்னம்பலம், கந்தையா வைத்தியநாதன், செல்லையா குமாரசூரியர், இலட்சுமன் கதிர்காமர் போன்றோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டம், பதவிகளுக்குப் பலியான சுந்தரலிங்கம் பிற்காலத்தில் கழிவிரக்கப்பட்டார். மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது.

பேராசிரியர் சுந்தரலிங்கம் டி.எஸ். சேனநாயக்கா, யோன் கொத்தலாவெலா போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கு நீண்டகாலமாக ஆலோசகராக இருந்தவர். டிசெம்பர் 10, 1948 இல் இந்திய குடியானவர்களது குடியுரிமைச் சட்டம் இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பேராசிரியர் சுந்தரலிங்கம் அதற்கு எதிராக வாக்களித்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவரிடம் விளக்கம் கேட்ட போது விளக்கம் கொடுக்க மறுத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் தனது அமைச்சர் ( ஆinளைவநச ழக வுசயனந யனெ ஊழஅஅநசஉந ) பதவியைத் துறந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு (மே 14, 1976) 17 ஆண்டுகளுக்கு முன்னரே 1959 இல் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

50:50 கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் செப்தெம்பர் 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் மீன்பிடி அமைச்சராகச் சேர்ந்து கொண்டார். அதன் மூலம் இலங்கை இந்திய காங்கிரசோடு மலையகத் தமிழர்களது குடியுரிமைக்குப் பாடுபடுவேன் எனப் பொன்னம்பலம் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். 1953 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற சேர் யோன் கொத்தலாவெலா பொன்னம்பலத்தை அமைச்சரiவியல் இருந்து வெளியேற்றி அவமானப்படுத்தினார்.

டி.எஸ். சேனநாயக்கா 1953 காலமான போது அடுத்த பிரதமராக மூப்பு அடிப்படையில் சேர். யோன் கொத்தலாவலா பிரதமராக வந்திருக்க வேண்டும். ஆனால் டட்லி செனநாயக்கா இலங்கையின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்பதற்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் பாடுபட்டார் என்ற கோபம் காரணமாகவே அவர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

செல்லையா குமாரசூரியர் திருமதி பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் (1970 – 1977) அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பின் அவர் தேடுவாரற்றுக் காணாமல் போய்விட்டார்.

சந்திரிகா குமாரதுங்கா அமைச்சரவையில் இலட்சுமன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால் பிரதமர் பதவி வெற்றிடமாக வந்த போது அவர் தமிழர் என்ற காரணத்துக்காகக் கழட்டிவிடப்பட்டார்.

1915 இல் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அடுத்த கிழமை சற்று விரிவாக எழுதுவேன். (வளரும்)