ஞாயிறு, 17 நவம்பர், 2024

சி. சே. மார்ட்டின்

 

சி. சே. மார்ட்டின்

சி. எக்ஸ். மார்ட்டின்
C. X. Martyn
இலங்கை நாடாளுமன்றம்
யாழ்ப்பாணம்
பதவியில்
1970–1977
முன்னையவர்ஜி. ஜி. பொன்னம்பலம்
பின்னவர்வி. யோகேஸ்வரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மார்ச்சு 1908
இனம்இலங்கைத் தமிழர்

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக