பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது[3]. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்[1]. அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார்[1]. பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது [4]. மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.[தொகு] சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.[தொகு] ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்
பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.[தொகு] வரலாற்று முக்கியத்துவம்
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசியவாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.[தொகு] பிரபாகரன் கூற்றுக்கள்
- "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." [5]
- 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [6]
- "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [7]
- "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். [8]
- "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [9]
- "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [10]
- "செய் அல்லது செத்துமடி."
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ 1.0 1.1 1.2 "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார்", தமிழ்வின், 24 மே 2009. 2009-05-25 அன்று தகவல் பெறப்பட்டது.
- ↑ "LTTE chief Prabhakaran killed: Lanka army sources". Times of India (May 18, 2009). பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
- ↑ Prabhakaran Killed (டெய்லி நியூஸ்) பிரபாகரனின் உடலை மே 19 காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது
- ↑ http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009
- ↑ Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
- ↑ 'I always give less importance to speech, Only after growing up in action that we should begin speaking.' -Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
- ↑ கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 15.
- ↑ கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கங்கள் 15.
- ↑ கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 15.
- ↑ கேணல் சூசை. "காலத்தை வென்ற காவிய நாயகன்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 17.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக