வியாழன், 11 நவம்பர், 2010

தந்தை செல்வா

தந்தை செல்வா சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தந்தை செல்வா எனப் பல இலங்கைத் தமிழர்களால் மரியாதையுடன் குறிப்பிடப்படுபவர். அவர் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராவார். ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60 களிலும், 70 களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறிஸ்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
இவருடைய மைந்தன் திரு.ச செ. சந்திரகாசன் தமிழத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து சிறப்புடன் செயலாற்றி வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக