இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் Ceylon Workers' Congress | |
இலங்கையின் அரசியல் கட்சிகள் | |
---|---|
தலைவர் | ஆறுமுகன் தொண்டமான் |
பொதுச்செயலாளர் | ஆறுமுகன் தொண்டமான் |
தொடக்கம் | 1939 |
தலைமையகம் | கொழும்பு |
கூட்டணி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
இது இலங்கை அரசியல் தொடர்பான தொடரின் கட்டுரையாகும். | |
[தொகு] இந்திய எதிர்ப்பலைகள்
1900 களின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு அலைகளை எழத்தொடங்கியிருந்தன. இலங்கை, இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தியது மேலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறும் படி நிர்பந்தித்து வந்தது. இதனால் தோட்டப்புரங்களிலும் கொழும்பிலும் பிறந்து வழர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மற்றும் மலையாளிகள் பல இன்னகளுக்கு முன் கொடுத்து வந்தனர். சிங்கள மகா சபை இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான பல போரட்டங்களை நடத்தி வந்த்தது.1939 அரசவையில் இரண்டு தீர்மானங்கள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. முதலாவது 15, 000 இந்தியர்களை நாடுகடத்தும் தீர்மானம் இரண்டாவது அரச சேவையில் இருந்த சகல இந்தியர்களையும் நாடுகடத்தல் என்பனவாகும். இதன் போது கொழும்பில் ஒன்று கூடிய இந்திய சங்களின் பிரதிந்திகள் இவ்விடயத்தை இந்திய தேசிய காங்கிரசிடமும் மகாத்மா காந்தியிடமும் கொண்டு செல்வதாக தீர்மானித்தது. அப்போது இலங்கை அரசவை பிரதிந்திகளாக இருந்த வைத்தியலிங்கம், பெரெய்ரா என்ற இருவரும் இந்தியா சென்று காந்தியை சந்த்தித்தனர். காந்தி தனது விசேட பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். யூலை 18 1939 இல் நேரு கொழும்பு வந்தார். அவர் அப்போதைய அரசவை தலைவர் டி. எஸ். சேனநாயக்காவையும் சில அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார் பேச்சுக்கள் பலனற்றுப் போகவே, நேரு இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை சந்தித்து அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக