புதன், 20 நவம்பர், 2013

தா சிவசிதம்பரம்

தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் (Thamotharampillai Sivasithamparam, மார்ச் 26, 1926 - நவம்பர் 9, 1992) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
தா. சிவசிதம்பரம்
T. Sivasithamparam
 
நாஉ
பதவியில்
1960 – 1970

முன்னவர்செ. சுந்தரலிங்கம்,சுயேட்சை
பின்வந்தவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
பதவியில்
1977 – 1983
முன்னவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

பிறப்புமார்ச்சு 261926
இறப்புநவம்பர் 9 1992(அகவை 66)
பயின்ற கல்விசாலைதிருகோணமலை இந்துக் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சிவசிதம்பரம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் பிறந்தவர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை முல்லைத்தீவு கிராம சேவையாளராகப் பணியாற்றியவர். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் கிராம அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சிவசிதம்பரம் 1960 மார்ச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம்சென்றார்.[1] அதே ஆண்டு இடம்பெற்ற 1960 சூலை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] பின்னர் அவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் 1965 தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] ஆனாலும் 1970 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் எக்ஸ். எம். செல்லத்தம்புவிடம் 273 வாக்குகளால் தோற்றார்.[4]
1972 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை அமைத்தனர். கூட்டணியின் சார்பில் சிவசிதம்பரம் வவுனியா வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு 1977 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5]இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிவசிதம்பரம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[6].

மறைவு[தொகு]

1983 இனக்கலவரத்தின் பின்னர் சிவசிதம்பரம் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் 1992 நவம்பர் 9 இல் இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக