புதன், 20 நவம்பர், 2013

வீ.என். நவரத்தினம்

வ. ந. நவரத்தினம்
V. N. Navaratnam
 
நாஉ

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - சாவகச்சேரி
பதவியில்
1956 – 1983
முன்னவர்வி. குமாரசாமி,அஇதகா
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழர் விடுதலைக் கூட்டணி

பிறப்புசூன் 51929
நுணாவில்,சாவகச்சேரி,இலங்கை
இறப்புசனவரி 29 1991(அகவை 61)
டொரண்டோகனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
வாழ்க்கைத்
துணை
இரகுபதி நவரத்தினம்
பயின்ற கல்விசாலைதிரிபேக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
துறைவழக்கறிஞர்
சமயம்சைவ சமயம்
வ. ந. நவரத்தினம் (V. N. Navaratnam, 5 சூன் 1929 - 29 சனவரி 1991) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். நவரத்தினம் ஏப்ரல் 1956 முதல் சூலை 1983 வரை சாவகச்சேரி தேர்தல் தொகுதியை இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வி. என். நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[1].
கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்து சிறிது காலம் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த நவரத்தினம், பின்னர் நிரந்தரமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். மூன்று நாடுகளிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவருக்கு சிறீ நமச்சிவாயா, சிறீ வல்லிபுரானந்தன், மைத்ரேயி, சிறீ சண்முகானந்தன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக