புதன், 20 நவம்பர், 2013

தமிழுக்காக இறுதிவரை உழைத்த க.பொ.இரத்தினம் அவர்களும், எனது நினைவுத் திரைகளும்
ந.நகுலசிகாமணி
வேலணையில் கந்தப்பர் கார்த்திகேசு பொன்னம்பலம் பத்தினிப்பிள்ளை அவர்க ளுக்கு மகனாக இரத்தினம் அவர்கள் 1914ம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் பிறந்தார். அவர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியராகி, பண்டிதர் பரீட்சையில்தேறி பண்டிதராகி விரிவுரை யாளராக உயர்ந்து, சென்னை பல்கலைக்கழத்த்தில் தமிழாராய்ச்சி செய்வதற்கு 1940இல் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று, தமிழ் மூதறிஞராக நடமாடும் பல்கலைக்கழகமாக தமிழ் வளர்த்ததோடு, திருக்குறள் மாநாடுகளை இலங்கையிலும், பல வெளிநாடுகளிலும் நடாத்தி யிருந்தார். மாநாட்டில் ம.பொ.சிவஞானம், இலக்குமணச்செட்டியார், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் இவர்கள் போன்று பல தமிழறிஞர்களை வரவழைத்து பங்கேற்க வைத்தார். 1955ல் கொழும்பு மகரகம அரசின் ஆசிரியர் கலாசாலையில் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர்.


தனிச் சிங்கள சட்டம்
இலங்கையின் வரலாற்றிலே 1956ம் ஆண்டு ஒரு கொந்தளிப்பான ஆண்டாகும். இந்த ஆண்டிலேதான் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டம்
நிறைவேற்றப்படுவதற்கு முன்பு 1944ம் ஆண்டில் சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகள் என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறைவேற்ற உருவாக்கப் பட்ட அரசகரும மொழிகள் திணைக்களத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக அரசினர், இரத்தினம் அவர்களை அந்தப் பதவியில் அமர்த்தினர்.

எல்லாம் “தமிழ் இயக்கம்” எனும் பெயருடன் ஓரியக்கத்தை ‘தந்தை செல்வா’ வின் “சுதந்திரன்” ஏட்டின் மூலம் நடாத்தி வந்தார். அரச கருமத்திணைக்கழக மூலம் தமிழ்மொழியை பல திணைக்கழகத்திலும் நடைமுறைப்படுத்திய செயல்வீரன் க.பொ. இரத்தினம் அவர்கள் அதில் பணிபுரியும்போது பதினையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் ஆட்சிச் சொற்களைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்தி நான்கு தொகுதிகளாக இலங்கை அரச அச்சகத்திலே வெளியிட்டு வைத்தவர்.

1963ல் தனிநாயக அடிகளாரும் க.பொ.இரத்தினம் ஐயா அவர்களும் சேர்ந்து கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவினார்கள். அதன் தொடர்ச்சி யாக பல தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடந்ததோடு இன்று செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டு செம்மொழி மாநாடும்  நடந்துள்ளது.

கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்

தமிழின்மீதும் தமிழ் மக்கள் மீதும் உள்ள பற்று காரணமாக அவரை அரசியலில் ஈடுபடவைக்கத் தூண்டியது. தமிழ்அரசுக்கட்சியின் உப பத்திரிகையான ‘விடுதலை பரணி’ என்னும் ஏட்டின் ஆசிரியராக பணியாற்றியிருந்த வேளையில் கிளிநொச்சி தொகுதியில் போட்டியிட தமிழரசுக்கட்சி வேட்பாளராக நிறுத்தியிருந்தது. அன்று இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் மந்திரி வே.குமாரசாமி, வி.ஆனந்தசங்கரி ஆகியோரை தோற் கடித்து இரத்தினம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக தெரிவுசெய்யப்பட்டு மீண்டும் அத்தொகுதியைத் தமிழரசுக்கட்சிக்கு பெற்றுக் கொடுத்தார். கிளிநொச்சியில் தனி யான காணி அலுவலகம், தருமபுரத்தில் பாலம், வீரமடு குடியேற்றம், போன்ற பணிகளை அரச உதவியுடன் செய்வித்தார்.

ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர்-:1970


தேசிய அரசில் அடையாள அட்டை இலங்கையில் அனைவருக்கும் வழங்கும் மசோதாவை கட்சிக்கட்டுப்பாட்டை மீறி எதிர்த்து வாக்களித்தமையால், கட்சி கட்டுப் பாட்டை மீறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் அவர்களைத் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றியிருந்தது. அதன்பின்னர் வ.நவரத்தினம் (தமிழரசுக்கட்சி மூளை என்று வர்ணிக்கப்பட்டவர்) தமிழர் சுயாட்சிக்கழகம் என்னும் புதியகட்சியை ஆரம் பித்து இருந்தார். 1970 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது நவரத்தினம் அவர்களைத் தோற்கடிப்பதற்காக க.பொ அவர்களை ஊர்காவற்றுறைத் தொகுதியில் போட்டியிடப் பணித்தது. அவருடன் நவரத்தினமும் வேறு மூவரும் போட்டியிட்ட தேர்தலில் பெரும் பான்மையான வாக்குகளால் வெற்றிவாகை சூடினார்.

தடுப்புக்காவலில்
1972ஆம் ஆண்டில் தமிழினத்தின் சில அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் புதிய குடியரசு அமுலுக்கு வரஇருந்தது. அப்போது அதன் எதிர்ப்பு நடவடிக் கையாக தமிழ்ஈழத்தை அமைக்கக் கூறி துண்டுகளை வைத்திருந்ததாகவும் மக்களுக்கு வழங்கியதற்காகவும் 1976 மே 13ம் நாள் பத்து நாட்கள் பிற தலைவர்களோடு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பின்பு விசேட நீதிமன்றத்தினால் (வுசயைட யவ டீயச) விடுதலை செய்யப் பட்டார்.

மீண்டும் ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர் 1977

மீண்டும் 1977ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது இத்தேர்தலிலும் தன்னை எதிர்த்து சுயாட்சிக்கழகச் சார்பில் போட்டியிட்ட திரு.நவரத்தினம் அவர்களை வென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். பண்டிதர் அவர்கள் 18 ஆண்டுகள் நாடாளு மன்றஉறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கும் தமிழுக்கும் சேவை பல ஆற்றியுள்ளார்.

மதுரை உலகத்தமிழாராய்ச்சி மாநாடு

1981 தமிழ்நாடு சுற்றுலாவின்போது க.பொ.ரத்தினம்
1981ம் ஆண்டு தமிழக அப்போதைய முதல் அமைச்சர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்டது. தமிழர்விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இளைஞரணி சார்பில் நானும் தலைமன்னார் வழியாக கப்பலில் சென்று மாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. மாநாட்டு முடிவில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு தனிரயில்(தொடர்) வண்டி  யில் தமிழகஅரசினால் நான்கு தினங்கள் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றுலாவில் பங்குபற்றிய போதும்  திரு.கா.பொ. இரத்தினம் அவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது எனது மனத்திரைகளில் இன்றும் திரையிட்டவாறே உள்ளது.

தமிழ்மறைக்கோட்டம்

திரு.கா.பொ.இரத்தினம் அவர்கள் எழுதிய “நினைவுத் திரைகள்” என்ற நூலில் யாழ்நகரில் தமிழ்மறைக் கோட்டத்தை நிறுவும் நோக்குடன் தான் ஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டுச் சேர்த்தநூல்கள் யாவும் தமிழ் ஈழத்தில் நடைபெறும் தமிழீழப் போரினால் அழிந்துவிட்டன. இலங்கை அரசுப்படைகளின் குண்டுத்தாக்குதலினாலும் வேலணையி லுள்ள என் வீட்டின் ஒருபகுதியும் இந்நூல்களும் ஏனைய தமிழ் ஆங்கில சமஸ்கிருத நூல்களும் அழிந்தன.  எனது வீட்டின்மேல் 24-5-1987இல் இலங்கை, விமானப்படை நான்கு குண்டுகள் போட்டது. அப்பொழுது அவ்வீட்டில் மைக்கல் பிலிப்போப், தோமஸ்கோன்சன் என்னும் பிரான்சுநாட்டுப் பத்திரிகைநிருபர்கள் இருவர் விடுதலைப்புலிகளின் விருந்தினர் களாகத் தங்கியிருந்தனர். இவர்கள் தப்பித் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்து இக்குண்டு வீச்சின் கொடுமையினைப் பத்திரிகைகளுக்கு எடுத்துரைத்தனர். என்று எழுதியுள்ளார்.

1987ல் சென்னை மரினா கடற்கரையில் உண்ணாவிரதம்

திரு.இரத்தினம் அவர்கள் தடுப்புக்காவலில் பத்து நாட்கள், தூக்குக்கயிறு, தனிஆட்சி, மனப்பால், அடிமைச்சாசனம், இலங்கையில் இன்பத்தமிழ், காவியமணம், நினைவுத்திரைகள் என்பன அவர் வெளியிட்ட நூல்களில் சில இவருடைய மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டு தமிழ்மக்கள் அனைவரிற்கும் பேரிழப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக