நம்மூர்காரர் மட்டுமல்ல நம் அயலவர் பற்றி....
மாண்புறு மக்கள்3. *-+*-+*-+*-+*-+*-+ கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட கா.பொ.இரத்தினம் அவர்கள் 1914ம் ஆண்டு பங்குனி10 இல் வேலணையில் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை வேலணையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணத்திலும் கற்றுத் தேர்ந்தார்.தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் விளங்கியவர் தனது 19 வது வயதில்1933 இல் பண்டிதர் பட்டம் பெற்றார்.இலண்டன் பல்கலைக் கழகத்திலும்,சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பட்டப் படிப்பினை மேற்கொண்டார்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும் கடமை புரிந்தார்.1941 இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார்.1942 இல் வித்துவான் பட்டம் பெற்றவர் பின்னர்1945 முதல் 1956 வரை மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ் ஆசானாய் அரும் பணியாற்றினார்.
1945 இல் இலண்டன் பல்கலைக் கழகத்தில் இளங்கைலை சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1952 இல் கீழைத் தேய மொழிகளில் முதுமாணிப் பட்டம் என ஏராளமான பட்டங்களை பெற்றார்.
மலேயாப் பல்கலைக் கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு சேர்ந்து பணியாற்றினார்.
1952 இல் கொழும்பு தமிழ் மறைக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கி தமிழ் வளர அரும்பணியாற்றினார்.1960 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராக பொறுப்பேற்று அதனைத் திறம்பட நடாத்தினார்.திருக்குறள் பரவ அரும்பாடு பட்டார்.முதன் முதலில் இலங்கையில் வேலணையில் திருக்குறள் மாநாட்டை நடத்தி சிறப்பு செய்தார். முருகு என்ற இலக்கிய வெளியீட்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.பின்னர் அரசியலில் நுழைந்து 1965-1970 காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியின்கிளிநொச்சித் தொகுதியின் பா.உ ஆகக் கடமையாற்றினார்.1970 இலிருந்து 1983 வரை ஊர்காவற்றுறைத் தொகுதியி நாடாளுமன்ற உறுப்பினரானார்.1983 இனக்கலவரத்தை அடுத்து தமிழ் நாடு சென்னையில் வாழ்ந்தவர் 2003 இல் இலங்கை வந்து வெள்ளவத்தையில் வசித்தவர் 2010 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இவர் எழுதிய நூல்கள்
************************
1.தமிழ் இலக்கியம் கற்பித்தல்
2.தமிழ் உணர்ச்சி
3.உரை வண்ணம்
4.அன்புச்சோலை
5.காவியய மணிகள்
இன்னும் பல நூல்கள்
பெற்ற பட்டங்கள்
********************
1.தமிழ் மறைக் காவலர்
2.திருக்குறள் செல்வர்
3.குறள் ஆய்வுச் செம்மல்
4.செந்தமிழ்க் கலைமணி
5.உலகத் தமிழ்ச் செம்மல்
இவர் பற்றிய நூல்கள்
************************
1.வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம்
(ஆசிரியர்: தில்லைச்சிவன்)
2.தமிழ் மறைக் காவலர் காபொ.இரத்தினம்
(ஆசிரியர்:நா.சுப்பிரமணியன்)
+++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக